Automobile Tamilan

OBD-2B பெற்ற 2025 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு வெளியானது

hero xoom 110 obd 2b

110சிசி ஸ்கூட்டர் சந்தையில் ஹீரோ விற்பனை செய்து வருகின்ற ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஜூம் 110 மாடலில் OBD-2B எஞ்சின் பெற்றதாக விற்பனைக்கு ரூ.83,578 முதல் ரூ.89,578 வரை நிர்ணயம் செயப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த LX வேரியண்டில் OBD-2B அப்டேட் பெறாத நிலையில், மற்ற VX, ZX, மற்றும் காம்பேட் எடிசன் என மூன்றில் மட்டும் பெற்றுள்ளது. ஜூம் 110 ஸ்கூட்டரில் OBD-2B உடன் 7250rpm-ல் 8 bhp பவர், 5750rpm-ல் 8.7Nm டார்க் வெளிப்படுத்துகின்ற இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக உள்ளது.

(எக்ஸ்-ஷோரூம்)

12-இன்ச் அலாய் வீல் கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரின் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்டு ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு, சிவப்பு,நீலம் போன்றவற்றுடன் காம்பட் கிரே நிறத்தை கொண்டதாகவும் உள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ள ஜூம் 110 விலை தற்பொழுது ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை.

யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உடன் எல்சிடி கிளஸ்ட்டரை பெற்றதாகவும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Exit mobile version