ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான ஆக்டிவா வரிசையில் உள்ள 125சிசி எஞ்சின் பெற்ற ஆக்டிவா 125 மாடலில் TFT கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று ரூ. முதல் ரூ. வரையிலான (எக்ஸ்ஷோரூம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் அடிப்படையான டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள முன்புறத்தில் பேனல் அமைப்பில் கலர் அமைப்புகள் மற்றும் பிரவுன் கலரில் கொடுக்கப்பட்ட சீட் மற்றும் உட்புற பேனல்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருப்பு, கிரே மெட்டாலிக், கிரவுண்ட் கிரே, ப்ளூ, ரெட் மெட்டாலிக், மற்றும் வெள்ளை என 6 விதமான நிறங்களை பெற்று DLX, H-Smart என இரண்டு விதமான வேரியண்ட் பெறும் நிலையில் ஹெச்-ஸ்மார்ட் வேரியண்டில் ரிமோட் மூலம் ஸ்டார்ட் செய்யும் வசதி உள்ளது.
தொடர்ந்து எஞ்சின் ஆப்ஷனிலும் அடிப்படையான மெக்கானிக்கல் வசதிகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை.
ஆக்டிவா 125 மாடலின் முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் 90/100-10 53J பின்புறத்தில் டியூப்லெஸ் டயர் பொருத்தப்பட் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் முன்புறத்தில் 190மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கும் கொண்டுள்ளது.
PGM-FI ஆதரவுடன் கூடிய 123.92cc HET OBD2B என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது. இதில் தொடர்ந்து சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.
2025 மாடலின் முக்கிய வசதிகளில் ஒன்று புளூடூத் இணைப்புடன் கூடிய புதிய 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.
(Ex-showroom Delhi)
முந்தைய ஆக்டிவா 125 மாடலை விட ரூ.7,717 வரை h-smart வேரியண்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.