Automobile Tamilan

2025 கேடிஎம் RC200ல் TFT கிளஸ்ட்டருடன் மாற்றங்கள் என்ன.!

2025 ktm rc200

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபேரிங் ரக ஸ்டைல் பெற்ற கேடிஎம் RC200 மாடலில் 2025 ஆம் ஆண்டில் TFT கிளஸ்ட்டருடன் கூடுதலாக மேட் கிரே நிறத்தை பெற்றதாக விற்பனைக்கு ரூ.2,54,028 எக்ஸ்-ஷோரூம் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்றபடி, அடிப்படையான டிசைன் உட்பட எஞ்சின் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது. ஆர்சி200 மோட்டார்சைக்கிளில் தொடர்ந்து 25 hp பவரை வெளிப்படுத்தும் 199cc எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஆர்சி200 பைக்கில்  முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை  இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று இரட்டை சேனல் ABS பெற்றதாக கிடைக்கின்றது.

கொடுக்கப்பட்டுள்ள புதிய TFT கிளஸ்ட்டர் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுவதுடன் தெளிவாக பார்வைக்கு கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக பல்சர் ஆர்எஸ் 200, கரீஸ்மா XMR 210, மற்றும் யமஹா ஆர்15, சுசூகி ஜிக்ஸர் SF250 போன்றவை கிடைக்கின்றது.

Image- SkSajidRider/Youtube

Exit mobile version