Automobile Tamilan

2025 ஆக்சஸ் ஸ்கூட்டரில் ரைட் கனெக்ட் TFT எடிசன் வெளியானது

suzuki access rideconnect tft edition

சமீபத்தில் வெளியான 2025 ஆம் ஆண்டிற்கான சுசூகி நிறுவன ஆக்சஸ் 125 ஸ்கூட்டரில் கூடுதல் மேம்பாடாக 4.2 அங்கல டி.எஃப்.டி கிளஸ்டர் கொண்ட ரைட் கனெக்ட் ஸ்பெஷல் எடிசன் மாடல் ஆனது விற்பனைக்கு ரூ.1,01,600 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமான மாடலை ஓல அமைந்திருந்தாலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பேர்ல் மேட் அக்வா சில்வர் நிறத்துடன் மெட்டாலிக் மேட் பிளாக் எண். 2, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, பேர்ல் கிரேஸ் ஒயிட் மற்றும் சாலிட் ஐஸ் கிரீன் ஆகிய ஐந்து வண்ணங்களிலும் கிடைக்கும்.

முந்தைய எல்சிடி கிளஸ்ட்டரை விட மிக தெளிவான பார்வைக்கு கிடைக்கும் வகையில் ரெட் கனெக்ட் எனப்படுகின்ற ப்ளூடுத் வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்து பல்வேறு அறிவிப்புகள், வாட்ஸ்ஆப் அலர்ட், வானிலை அறிக்கை என பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

Exit mobile version