இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

2025-triumph-trident-660-launched

முந்தைய மாடலை விட ரூ.37,000 வரை விலை அதிகரிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான டிரையம்ப் டிரைடென்ட் 660 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.49 லட்சம் முதல் ரூ.8.64 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

660cc இன்-லைன் மூன்று சிலிண்டர் எஞ்சினை பெற்று அதிகபட்சமாக 80 bhp மற்றும் 64 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் கூடுதலாக பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளது.

டீயூப்லெர் ஸ்டீல் பெரீமீட்டர் சேஸ் கொண்ட மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு, கூடுதலாக முழு கருப்பு நிறத்தையும் பெற்றுள்ள மோட்டார்சைக்கிளில் உள்ளது. இதில் கருப்பு நிறம் மட்டுமே ரூ. 8.49 லட்சமாகும், அதே நேரத்தில் மூன்று டூயல் டோன் கொண்ட நிறங்கள் விலை ரூ.8.69 லட்சமாகும்.

இந்த பைக்கில் 17-இன்ச் கேஸ்ட் அலுமினிய அலாய் வீல் உடன் மிச்செலின் ரோடு 5 டயர் பெற்றதாக 310மிமீ இரட்டை டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 255மிமீ ஒற்றை டிஸ்க் கொண்டதாக அமைந்துள்ளது.

Exit mobile version