Automobile Tamilan

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

டிவிஎஸ் மோட்டாரின் அப்பாச்சி பிராண்டில் கிடைக்கின்ற RTR 160 4V மோட்டார்சைக்கிள் டிசைன் மாற்றங்களுடன் விலை ரூ.1.28 லட்சம் முதல் ரூ.1.4 லட்சம் வரையில் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 2025 அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் ரேசிங் சிவப்பு, மரைன் நீலம், மேட் கருப்பு என மூன்று புதிய நிறங்களை பெற்று LED DRL உடன் கூடிய கிளாஸ்-D ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட், இன்டிகேட்டர் என அனைத்தும் முழுமையாக LEDஆக மாற்றப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு மற்றும் குரல் வழி உதவியுடன் பல்வேறு டிவிஎஸ் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுவற்காக  5-இன்ச் TFT கிளஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 159.7cc என்ஜின் பொருத்தப்பட்டு Sport மோட் மூலம் அதிகபட்சமாக 17.55hp பவரை 9,250 rpm-லும், டார்க் 14.73 Nm ஆனது 7,250 rpm அடுத்து, Urban அல்லது Rain மோட் 15.64 hp பவரை 8,600 rpm-ல், டார்க் 14.14 Nm ஆனது 7,250 rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு கூடுதலாக சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் பெற்று, டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பெனஷன் அல்லது யூஎஸ்டி கோல்டன்  பொருத்தப்பட்டு 270mm பிடெல் டிஸ்க் பிரேக் உடன் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 200 மிமீ டிஸ்க் கொண்ட வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

(ex-showroom)

சமீபத்தில் 20 ஆண்டு கால அப்பாச்சி பிராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு எடிசன் வெளியானது

Exit mobile version