2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி வரிசையில் உள்ள RTR 200 4V பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் TFT கிளஸ்ட்டர் பெற்று விலை ரூ.1.54 லட்சம் முதல் ரூ.1.60 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் 9,000 rpm-ல் 20.8 PS பவர் மற்றும் 7,250 rpm-ல் 17.25 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 200சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸூடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் பெற்று, டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேட் பிளாக் மற்றும் கிரானைட் கிரே என இரு புதிய நிறங்களை பெற்று LED DRL உடன் கூடிய கிளாஸ்-D ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட், இன்டிகேட்டர் என அனைத்தும் முழுமையாக LEDஆக மாற்றப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு மற்றும் குரல் வழி உதவியுடன் பல்வேறு டிவிஎஸ் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுவற்காக  5-இன்ச் TFT கிளஸ்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது.

(எக்ஸ்-ஷோரூம்)

சமீபத்தில் 20 ஆண்டு கால அப்பாச்சி பிராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறப்பு எடிசன் வெளியானது

Exit mobile version