Automobile Tamilan

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

யமஹா MT-15 v2.0

2025 ஆம் ஆண்டிற்கான யமஹா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற நேக்டூ ஸ்டைல் MT-15 v2.0 மோட்டார்சைக்கிளின் STD வேரியண்ட் ரூ.1,71,189 மற்றும் DLX வேரியண்ட் ரூ.1,82,139 ஆக எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

STD வேரியண்டில் மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் சில்வர் சியன் என இரு நிறங்களை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக டாப் டிஎல்எக்ஸ் வேரியண்டில் ஐஸ் ஸ்டோரம், விவீட் வைலட் மெட்டாலிக், மெட்டாலிக் பிளாக் என மூன்று நிறங்களை பெற்றிருப்பதுடன் கூடுதலாக TFT கிளஸ்ட்டர், ஹஸார்டு சுவிட்ச், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், எரிபொருள் செலவு உள்ளிட்ட வசதிகளுடன் பிரபலாமான யமஹாவின் Y-connect ஆப் செயல்பாடினை ப்ளூடூத் மூலம் இணைக்கலாம்.

மற்ற வசதிகளில் பராமரிப்பு அறிவிப்பு, கோளாறுகளை கண்டறிந்து எச்சரிக்கை அமைப்பு, ரெவ்ஸ் டேஷ்போர்டு, தனித்துவமான ரைடர் தரவரிசை அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளது.

மற்றபடி எம்டி-15 வி2.0 பைக்கில் தொடர்ந்து  155cc, சிங்கிள்-சிலிண்டர், லிக்யூடு கூல்டு இயந்திரம் 10,000ஆர்பிஎம்மில் 18.4 hp மற்றும் 7,500ஆர்பிஎம்மில் 14.1 Nm டார்க்கை வெளியிடுகிறது, மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை பெற்ற டெல்டா பாக்ஸ் பிரேம் மற்றும் 141 கிலோ எடை குறைந்த எடை அதன் சுறுசுறுப்பு மற்றும் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. மற்றபடி, 17 அங்குல வீல் பெற்று கோல்டன் நிறத்தில் USD ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது.

Exit mobile version