Automobile Tamilan

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

2025 yamaha r15 v4 bike

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான R15 V4 மாடலில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டு ரூ.1.69 லட்சம் முதல் ரூ. 2.13 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது.

எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 10,000rpm-ல் 18.1 bhp பவர் மற்றும் 7,500rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

2025யின் யமஹா ஆர்15 பைக்கின் மாற்றங்கள்

R15 விலைப் பட்டியல்

Ex. Showroom
Yamaha R15M ₹ 2,02,539 – ₹ 2,13,559
Yamaha R15 V4 ₹ 1,86,309 – ₹ 1,91,309
Yamaha R15S ₹ 1,69,369

டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியுடன் கிடைக்கின்ற ஆர்15 வி4 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் ஆர்15 எம் வேரியண்டில் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச், பை-டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர், ஆர்15எஸ் வேரியண்டில் ஒற்றை இருக்கை பெற்றுள்ளது.

Exit mobile version