
2026 ஆம் ஆண்டிற்கான புதிய சுசூகி ஹயபுசா சூப்பர்பைக்கில் பல்வேறு நவீன எலக்ட்ரானிக் சார்ந்த மேம்பாடுகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மாடலாக வந்துள்ள நீல நிறத்தில் பல்வேறு சிறப்பு பாடி கிராபிக்ஸ் மற்றும் சற்று வேறுபாடான அம்சங்களை கொண்டு வழக்கமான மாடலை விட மாறுபட்டதாக அமைந்துள்ளது.
தொடர்ந்து , 1,340cc இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் 190hp மற்றும் 150Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மற்றபடி, 17 அங்குல வீல் பெற்று முன்புறத்தில் இரட்டை டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க்குடன் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது.
2026 Suzuki Hayabusa
மேம்படுத்தப்பட்ட புதிய ஹயபுஸா பைக்கில் இன்ஜின் ரெஸ்பான்ஸ் ஆனது முன்பை விட சிறப்பாக இருப்பதற்காக இன்ஜின் த்ராட்டில் மேப்களில் (Throttle Maps) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், குறைந்த வேகத்தில் பைக்குக்குத் தேவையான டார்க் வழங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அடுத்து, மிக முக்கியமாக க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டத்தை நீண்ட தூரப் பயணங்களை எளிதாக்க, க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் கியர்களை மாற்றும் போதும் கூட தொடர்ந்து இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பைக்கின் ஒட்டுமொத்த எடையைக் குறைக்க உதவும் வகையில், வழக்கமான பேட்டரிக்கு பதிலாக லித்தியம்-அயன் பேட்டரி (Lithium-ion Battery) பயன்படுத்தப்பட்டு, இதில் உள்ள இரட்டை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சைலன்சர்கள் இப்போது கருப்பு அனோடைஸ் செய்யப்பட்ட எண்ட்கேப்ஸ் மற்றும் ஹீட் ஷீல்ட்களுடன் வந்துள்ளன.
2026 ஹயபுசா ஸ்பெஷல் எடிஷனின் சிறப்புகள்
ஸ்பெஷல் எடிஷன் மாடலில் நீலம் மற்றும் வெள்ளை நிற கலவையை பெற்று சுஸுகியின் ரேஸ் பைக்குகளில் பயன்படுத்தப்படும் நிறமாகும். எரிபொருள் தொட்டியில் ஒரு பிரத்யேகமான ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜ் மற்றும் கருப்பு நிறத்திலான 3D பிராண்ட் லெட்டரிங் போன்றவை அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் நிலையில் பில்லியன் ரைடர் இருக்கைக்குப் பதிலாக ஸ்டாண்டர்ட் ஆக ஒரு ஸ்போர்ட்டியான சீட் கவுல் வழங்கப்படுகிறது.
இந்திய அறிமுகம் எப்பொழுது.?
சர்வதேச அளவில் இங்கிலாந்தில் ஸ்பெஷல் எடிஷன் £18,999 (சுமார் ரூ. 22.15 லட்சம்) விலையிலும், ஸ்டாண்டர்ட் மாடல் £18,599 (சுமார் ரூ. 21.67 லட்சம்) விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது விற்பனையில் உள்ள ஹயபுஸா விலை ரூ.18.10 லட்சம் ஆக உள்ளதால், இந்த மாடலை விட சுமார் ரூ.50,000-ரூ.80,000 கூடுதல் விலையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.