Automobile Tamilan

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

2026 Suzuki V-STROM SX

நெடுஞ்சாலை பயணங்களுக்கான அட்வென்ச்சர் டூரிங் ரக சுசூகி V-STROM SX 2026 ஆம் ஆண்டிற்கான மாடலில் புதிய நிறங்களுடன் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.2.02 லட்சத்தில் கிடைக்கின்றது.

அடிப்படையான மெக்கானிக்கல் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த பைக்கில் புதியதாக நீலத்துடன் கருப்பு, வெள்ளை உடன் நீலம் மற்றும் கருப்பு என மூன்று நிறங்கள் சேர்க்கப்பட்டு முந்தைய கருப்பு நிறத்துடன் மஞ்சள் நிறத்தில் பாடி கிராபிக்ஸ் சற்று மாறுபட்டுள்ளது.

தொடர்ந்து முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

முழுமையான எல்இடி விளக்குகளை பெற்றுள்ள வி-ஸ்டோராம் எஸ்எக்ஸ் பைக்கில் அட்வென்ச்சர் அனுபவத்துக்கு ஏற்ற 19 அங்குல முன் வீல் மற்றும் 17 அங்குல பின்புற வீலுடன் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

இந்த பைக்கில் 249cc  ஏர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 9,300rpm-ல் 26.5hp பவர், 22.2NM டார்க் ஆனது 7300rpm-ல் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும், சுசூகி நிறுவனத்தின் முதல் அட்வென்ச்சர் பயணங்களுக்கான V-STROM Expedition நடைபெறுகின்றது.

Exit mobile version