Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
புத்தம் புதிய குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்டம் | Automobile Tamilan

புத்தம் புதிய குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் சோதனை ஓட்டம்

cc317 2020 thunderbird 1

முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் மாடல் கேமரா கண்களில் சிக்கி இணையத்தில் படங்கள் வெளியாகியுள்ளது. சோதனை செய்யப்பட்டு வருகின்ற தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட மாறுபட்டதாக அமைந்திருப்பதே இங்கே பல கேள்விகளை எழுப்ப காரணமாக அமைந்துள்ளது.

சோதனை செய்யப்படுகின்ற தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை விட மாறுபட்டதாக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டு தட்டையான ஒற்றை இருக்கை, பிரிக்கப்பட்ட கிராப் ரெயில் மற்றும் புதிய டெயில் லைட் கொண்டிருக்கின்றது. அதே போல ராயல் என்ஃபீல்டு பொதுவாக பயன்படுத்துகின்ற வட்ட வடிவ ஹெட்லைட் மாற்றாக ஓவல் வடிவத்திலான ஹெட்லைட் கொண்டுள்ளது. என்ஃபீல்டின் பைக்கின் வழக்கமான புகைப்போக்கிக்கு மாற்றாக மேல் எழும்பி வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் டேங்க் வடிமைப்பு தற்போது விற்பனையில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்யப்படுகின்ற கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு மாடல்களுக்கு மாறுபட்டதாக விளங்க உள்ளது. எனவே இந்த மாடல் ஜாவா 42 மாடலுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் புதிய கிளாசிக், தண்டர்பேர்டு போன்றவை விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Exit mobile version