Automobile Tamilan

ரூ.10,000 வரை ஆம்பியர் இ-ஸ்கூட்டரின் விலை குறைந்தது

ampere magnus ex e scooter

ஆம்பியர் நிறுவனத்தின் ரியோ Li பிளஸ் மற்றும் மேக்னஸ் என இரு மாடல்களின் விலையை ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் மிகவும் சிறப்பான டிசைன் மற்றும் பல்வேறு வசதிகளை பெற்ற நெக்சஸ் என்ற ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது.

ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ள ஆம்பியர் ரியோ Li பிளஸ் மாடலில் வேகம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஓட்டுநர் உரிமம் அவசியமில்லாத இந்த ஸ்கூட்டரில் 1.3kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 70 கிமீ பயணிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

மேக்னஸ் EX வேரியண்ட் அதிகபட்சமாக மணிக்கு 50 கிமீ வேகத்தில் பயணிப்பதுடன் முழுமையான சார்ஜில் 100 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து, ரூ.9,000 வரை விலை குறைந்துள்ள மேக்னஸ் LT மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிப்பதுடன் முழுமையான சார்ஜில் 80 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Ampere Escooter Price list

(EMPS 2024 உட்பட, எக்ஸ்ஷோரூம்)

Exit mobile version