கிரீவ்ஸ் மொபைலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான பிரைமஸ், மேக்னஸ் EX, ஜீல் EX என மூன்றின் விலையும் உநர்த்தப்பட்டுள்ளது. ஆம்பியர் பிரைமஸ் விலை அதிகபட்சமாக ரூ.31,900 உயர்த்தப்பட்டு இப்பொழுது ₹ 1,49,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் phased manufacturing programme (PMP) திட்டத்தின் மூலம் மோசடியில் சிக்கிய ஆம்பியர் எலக்ட்ரிக் 124 கோடியை வட்டியுடன் செலுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஹீரோ எலக்ட்ரிக், ஓகினவா ஆட்டோடெக் போல ஆம்பியர் நிறுவனமும் FAME-II மானியத் திட்டத்தில் இருந்து முழுவதுமாக பதிவு நீக்கம் செய்யப்படுவதை எதிர்கொண்டுள்ளது. எனவே, ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விலை உயர்வை அறிவித்துள்ளது.
தொடக்க நிலை ஜீல் EX, முன்பு ரூ.75,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.20,900 விலை உயர்த்தப்பட்டு இப்பொழுது ரூ.95,900 ஆக உள்ளது. அடுத்து, மேக்னஸ் EX, மாடல் ரூ.83,900 ஆக இருந்த நிலையில் ரூ.21,000 அதிகரிக்கப்பட்டு ரூ.1.05 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ஆம்பியர் ப்ரைமஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1.10 லட்சமாக இருந்தது, ஆனால் இப்போது ரூ.1.49 லட்சமாக இருக்கும். இது முன்பை விட ரூ. 39,100 விலை உயர்ந்துள்ளது.
அதிகவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற பிரைமஸ் மாடலின் அதிகபட்ச வேகம் 77Km/h மற்றும் முழுமையான சிங்கிள் சார்ஜில் 107 Km பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுளது. 12 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் உடன் கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குவதுடன் நேவிகேஷன் அசிஸ்ட் வழங்குகின்றது.
Ampere Primus – ₹ 1,49,000
Ampere Magnus EX – ₹ 1,05,000
Ampere Zeal EX – ₹ 95,900
மேலும் படிங்க – ஏதெர், ஓலா, ஐக்யூப், விடா விலை உயர்வு
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…