100 கிமீ ரேஞ்சு.., ஆம்பியர் மேக்னஸ் புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்

30a8a ampere magnus pro

ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய மேக்னஸ் புரோ சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 100 கிமீ ரேஞ்சு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிமீ பயணத்தை மேற்கொள்ள வெறும் 15 பைசா மட்டும் போதுமானதாக இருக்கும் என ஆம்பியர் குறிப்பிடுகின்றது.

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை கொண்ட மேக்னஸ் புரோ மாடலில் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் உட்பட காம்பி பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு வசதிகளுடன் கூடுதலாக கீலெஸ் என்ட்ரி, திருட்டை தடுப்பதற்கான அலாரம் என பலவற்றைக் கொண்டுள்ளது.

மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்ற மேக்னஸ் புரோவில் இரு விதமான ரைடிங் மோட் அமைந்துள்ளது. ஈக்கோ மோடின் மூலம் அதிகபட்சமாக 100 கிமீ பயணிக்கவும், க்ரூஸ் மோட் மூலமாக 80 கிமீ பயணிக்கவும் இயலும்.

மேக்னஸ் புரோவில் இலகுவாக நீக்கும் வகையிலான பேட்டரி கொண்டிருப்பதுடன் குறைவான மின்சாரத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுவதனால் வெறும் 15 பைசாவில் ஒரு கிமீ பயணத்தை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பேட்டரி முழுமையாக தீர்ந்த பிறகும் கூடுதலாக 10 கிமீ வரை பயணிக்க உதவும்.

60V 30Ah லித்தியம் ஐயன் பேட்டரியை முழுமையாக சார்ஜிங் ஏறுவதற்கு 5-6 மணி நேரம் ஆகும். இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டு கூடுதலாக காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

150 கிலோ எடையுடன் 150 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் காயில் ஸ்பீரிங் பின்புறத்தில் உள்ளது.

இந்த மின்சார ஸ்கூட்டரில் மிக சிறப்பான இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் , ஃபைன்ட் தி ஸ்கூட்டர், ஃபாலோ மீ ஹோம் போன்றவற்றை கொண்டுள்ளது. கோல்டு, பிளாக் ,வெள்ளை மற்றும் ரெட் என நான்கு விதமான நிறங்களை கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் ஆம்பியர் மேக்னஸ் புரோ ஸ்கூட்டரின் விலை ரூ.73,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு மூன்று வருட வாரண்டி மற்றும் இரண்டு வருடம் கூடுதலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகின்றது.

Exit mobile version