Automobile Tamilan

இந்தியா வரவுள்ள ஏப்ரிலியா டுவோனோ 457 அறிமுக விபரம்..!

Aprilia tuono 457 bike 1

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற ஏப்ரலியா ஆர்எஸ் 457 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேக்டூ ஸ்டைல் டுவோனோ 457 (Aprilia Tuono 457) விற்பனைக்கு அடுத்த சில வாரங்களில் விலை அறிவிக்கப்பட்டு டெலிவரி பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

RS457 பைக்கில்  உள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற டுவோனோ 457cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின், இரட்டை கேம்ஷாஃப்ட் டைமிங் கொண்டு ஒவ்வொரு சிலிண்டருக்கு நான்கு வால்வுகளை பெற்று அதிகபட்சமாக 47 hp பவர் மற்றும் 43.5Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸூடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் கொண்டுள்ளது.

மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களும் ஒரே மாதிரியாக பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், முன்புறத்தில் 41mm அப்சைடு டவுன் ஃபோர்க் 120mm பயணிக்கும் வசதியுடன்,  ப்ரீலோட் அட்ஜெஸ்ட்டிபிட்டி கொண்ட 130mm பயணத்திற்கான ஸ்டீல் ஸ்விங்கார்மில் மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் டயர்கள் அளவு 110/70-R17 (முன்) மற்றும் 150/60-R17 (பின்புறம்) பிரேக்கிங் முறையில் 320 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் , டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோடுகளும் உள்ளது.

தற்பொழுது ஆர்எஸ் 457 மாடலின் விலை ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூ.4.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆக உள்ளதால், நேக்டூ ஸ்டைல் ஸ்டீரிட் ஃபைட்டர் டுவோனோ 457 விலை ரூ.4 லட்சத்தில் துவங்கலாம்.

Exit mobile version