Automobile Tamil

ஏதெர் 450, 340 எலெகட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைந்தது

Ather 450 Electric Scooter

ஜிஎஸ்டி வரி மின்சார வாகனங்களுக்கு குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஏதெர் 450 மற்றும் ஏதெர் 340 எலெகட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை ஏதெர் எனெர்ஜி நிறுவனம் குறைத்துள்ளது. விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி எனப்படுகின்ற சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மின்சார வாகனங்களும் விலை குறைய உள்ளது. எனவே, ஏதெர் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. சென்னையில் சமீபத்தில் ஏத்தர் எலெகட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கான பிரத்தியேகமான விற்பனை மையத்தை இந்நிறுவனம் திறந்துள்ளது. மேலும் சென்னையில் ஏத்தர் கிரிட் சார்பாக சார்ஜிங் நிலையங்களையும் துவங்கியுள்ளது.

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.

ஏதெர் 340 ஸ்கூட்டரில் 4.4 kw (5.9 PS) பவர், 20 NM டார்க் திறனையும், இந்த ஸ்கூட்டரில் முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கலாம். ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 5.1 விநாடிகள் தேவைப்படும்.

ஏதெர் 340 மின்சார ஸ்கூட்டர் விலை ரூ. 1,10,648

ஏதெர் 450 ஸ்கூட்டர் ஸ்கூட்டர் விலை ரூ. 1,22,224

(ஆன் ரோடு சென்னை)

ஏதெர் 340 – ரூ.1,02,460

ஏதெர் 450 – ரூ.1,13,715

(ஆன் ரோடு பெங்களூரு)

Exit mobile version