Automobile Tamilan

ஜனவரி 6.., ஏதெர் 450 அபெக்ஸ் விற்பனைக்கு அறிமுகமாகிறது

ather 450 apex bookings open

ஏதெர் நிறுவனம் தனது மிக வேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை 450 அபெக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு ஜனவரி 6, 2024 அன்று வெளியிடப்பட உள்ளது. விற்பனையில் உள்ள 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள 3.7 Kwh பேட்டரியை புதிய மாடலும் பெற வாய்ப்புள்ளது.

ஏதெர் 450 அபெக்ஸ் ஸ்கூட்டருக்கு கடந்த சில வாரங்களாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது.

Ather 450 Apex Escooter

ஏதெரின் மிக வேகமான ஸ்கூட்டர் என்பதனால் 450 அபெக்ஸின் டாப் ஸ்பீடு 110-125 கிமீக்குள் அமைய வாய்ப்புகள் உள்ளது. மேலும் 0-40 கிமீ வேகத்தை 3 வினாடிகளுக்குள் எட்டக்கூடும். அபெக்ஸ் மாடலில் ஈக்கோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் ரேப்+ என நான்கு ரைடிங் மோடுகளை பெற உள்ளது.

மற்றபடி, பேட்டரி ஆப்ஷன் ஆனது ஏற்கனவே உள்ள 450X ஸ்கூட்டரின் 3.7 kWh பேட்டரி பொருத்தப்பட்டு நிகழ்நேரத்தில் ரேஞ்ச் 110-120 கிமீ வரை வழங்கலாம். புதிய நிறத்துடன்  உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்படையாக தெரியும் வகையிலான பேனல்கள் பக்கவாட்டில் பெற்றிருக்கலாம்.

இந்த மாடலில் ஏதெர் வழங்குகின்ற புரோ பேக் கட்டாயம் இடம்பெற்றிருக்கலாம் எனவே, ஏதெர் 450 அபெக்ஸ் விலை ரூ.1.85 லட்சத்துக்குள் அமையலாம். மேலதிக விபரங்கள் ஜனவரி 6 ஆம் தேதி வெளிவரக்கூடும்.

இந்நிறுவனம் சந்தையில் 450S, 450X 2.9kwh மற்றும் 450X 3.7 kwh என மூன்று மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

Exit mobile version