Automobile Tamilan

ஸ்பெஷலான 450 அபெக்ஸ் உற்பத்தியை துவங்கிய ஏத்தர்

ather 450 apex

ஏத்தர் நிறுவனத்தின் 450 ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட 450 அபெக்ஸ் இ-ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியுள்ளதால் வரும் வாரங்களில் டெலிவரி துவங்கப்பட உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 100 கிமீ வேகத்தியல் பயணிக்கும் திறன் பெற்றுள்ள இந்நிறுவன வேகமான மாடலாக அறியப்படுகின்றது.

ரூ.1.89 லட்சம் விலையில் கிடைக்கின்ற அபெக்ஸ் ஸ்கூட்டரின் பிரத்தியேகமான நீல நிறம் கவர்ச்சியை அதிகரிப்பதுடன், ஆரஞ்ச் நிற அலாய் வீல், பின்புற பக்கவாட்டு பேன்லகள் உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவான பார்வைக்கு அறியும் வகையில் டிரான்ஸ்பெரன்ட் பேனல்களை பெற்றுள்ளது.

450X  மாடல் 6.4 kW (8.5 bhp) பவருக்கு பதிலாக 7 kW (9.3 bhp) உற்பத்தி செய்யும் PMS மின்சார மோட்டாரை பெறுகின்ற இந்த ஸ்கூட்டரில் அதிகபட்ச டார்க் 26 Nm ஆக இருக்கும். 450 அபெக்ஸ் புதிய Wrap+ ரைடிங் மோடு பெறுவதுடன் 2.9 வினாடிகளில் 0-40 கிமீ வேகத்தில் எட்டுவதுடன் 100 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டுள்ளது.

ஏத்தரின் 450 Apex மாடலின் 3.4kwh பேட்டரியை முழுமையான சார்ஜ் செய்தால் 157 கிமீ பயணிக்கும் வரம்பு வழங்கும் என சான்றிதழ் பெற்றுள்ளது. வாகனத்தை நிறுத்த பிரேக் பிடிப்பதற்கு பிரேக் லிவருக்கு பதிலாக திராட்டிளை ஏதிர்திசையில் திருப்பினால் வேகம் குறைவதுடன் ரீஜெனரேட்டிவ் பிரக்கிங் மூலம் பேட்டரி பவரை சேமிக்கும் வகையிலான மேஜிக் ட்விஸ்ட் நுட்பத்தை பெறுகின்றது.

மிக முக்கியமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் முன்பதிவு செய்தால் ரூ.1.97 லட்சம் ஆன்ரோடு விலையில் சிறப்பு ஏத்தர் 450 அபெக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டு இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே தயாரிப்பில் இருக்கும் மாடலாகும்.

Exit mobile version