Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ஜனவரி 28.., ஏதெர் 450x சூப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது

ஜனவரி 28.., ஏதெர் 450x சூப்பர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது

ather 450

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின், அடுத்த எலெக்ட்ரிக் சூப்பர் ஸ்கூட்டர் மாடலாக வெளியாக உள்ள 450x விற்பனையில் உள்ள மாடலை விட அதிகப்படியான ரேஞ்சு மற்றும் வேகம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் விற்பனைக்கு கிடைத்து வரும் நிலையில் கூடுதலாக டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி, மும்பை, புனே, மற்றும் ஹைத்திராபாத் நகரங்களில் விற்பனைக்கு முதற்கட்டமாக 450x விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த நகரங்களை தொடர்ந்து அடுத்த சில மாதங்களுக்குள் கோயம்புத்தூர், கொல்கத்தா, அகமதாபாத் மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் வெளியிட உள்ளது.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக விற்பனை செய்யப்படுகின்ற ஏதெர் 450 மாடலை தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் 450x மாடல் அதிகப்படியான ரேஞ்சு மற்றும் டாப் ஸ்பீடு அதிகபட்சமாகவும், அதே போல பல்வேறு மாறுபட்ட நிறங்களை பெற வாய்ப்புள்ளது.

ஏதெர் 450 விபரம்

ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 5.4 kw (7.3 PS) பவர்,  20.5 NM வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையான ஒரு முறை சார்ஜ் செய்தால், 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். 0-40 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

2.4 kWh லித்தியம் இயான் பேட்டரி 50,000 கிலோ மீட்டர் வரை உழைக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரி பேக் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமாக IP67 எனப்படும், தூசு மற்றும் நீரினால் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பேட்டரி விளங்கும்.

Exit mobile version