ஏத்தர் ரிஸ்தா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சீட் விபரம் வெளியானது

ather rizta scooter seat

எத்தர் வெளியிட உள்ள புதிய ரிஸ்தா (Ather Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற உள்ள இருக்கை போட்டியாளர்களை விட மிகப்பெரியதாகவும், அதிகப்படியான இடவசதியை வழங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

சந்தையில் உள்ள பெட்ரோல் ரக ஆக்டிவா மற்றும் ஓலா S1 pro என இரண்டையும் ஒப்பீடு செய்து டீசரை Rizta மாடலின் சீட் தொடர்பாக ஏத்தர் தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா X தளத்ததில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Ather Rizta

ஏத்தர் 450 வரிசையில் இருந்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட பிளாட்ஃபாரத்தில் வரவுள்ள ரிஸ்தா ஸ்கூட்டர் நேரடியாக டிவிஎஸ் ஐக்யூப் மாடலை எதிர்கொள்ளுவதுடன் மற்ற ஸ்கூட்டர்களையும் எதிர்கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

மிக அகலமான இருக்கை கொண்டுள்ள ரிஸ்தா இரண்டு நபர்களும் மிகவும் தாராளமாக இடவசதியை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் பின்புறத்தில் சிறிய அளவிலான சுமையை எடுத்துச் செல்ல ஏதுவாக ரேக் வசதியை ஆப்ஷனலாக தருவதற்கான வாயப்புகளே உள்ளது. அதேபோல, இருக்கைக்கு அடியில் வழங்கப்பட உள்ள ஸ்டோரேஜ் வசதியும் சிறப்பாக இருக்கலாம்.

அடிப்படையான டிசைன் மற்றும் தோற்றத்திலும் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தாலும் தொழிற்நுட்பம் சார்ந்த அம்சங்களில் ஏற்கனவே விற்பனையில் உள்ள 450X மாடலின் மிட் மவுன்ட் மோட்டாரை கொண்டுதான் வடிமைக்க உள்ளனர்.

டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ வரை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்க உள்ள ரிஸ்தாவில் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற உள்ளது. 3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 140-150 கிமீ தொலைவு பயணிக்கலாம். அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடல் 111-125 கிமீ ரேஞ்சு வழங்கலாம்.

டிப்வியூ எல்சிடி டிஜிட்டல் கன்சோல் பெற உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இது ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளை கொண்டிருக்கும்.

ACDC 24 (Ather Community Day Celebration 2024) கூட்டம் அனேகமாக பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் ரிஸ்தாவின் அறிமுகம் இருக்கலாம். அதனை தொடர்ந்து டெலிவரி ஜூன் அல்லது ஜூலை மாதம் துவங்கலாம்.