Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
7 ரூபாயில் 100 கிமீ பயணம்.., ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக் சிறப்புகள் | Atumobile Atum 1.0 electric bike launched | Automobile Tamilan

7 ரூபாயில் 100 கிமீ பயணம்.., ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக் சிறப்புகள்

Atumobile Atum 1 0 Launched

ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆட்டம்மொபைல் (Atumobile Pvt Ltd) வெளியிட்டுள்ள முதல் மாடல் ஆட்டம் 1.0 (Atum 1.0) மின்சார பைக்கினை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் பரவலாக மின்சார வாகனங்களின் மீதான ஈர்ப்பு கனிசமாக உயர்ந்து வரும் நிலையில் நம் நாட்டில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் முதல் தாயரிப்பினை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக் மாடல் குறைந்த வேகத்தில் இயங்கும் மின்சார இரு சக்கர வாகனங்களின் பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது.

மணிக்கு அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் திறன் பெற்றுள்ள இந்த மின் பைக்கிற்கான அனுமதியை ஐசிஏடி (ICAT – International Centre for Automotive Technology) வழங்கியுள்ளது. முழுமையாக லித்தியம் ஐயன் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு மூன்று முதல் 4 மணி நேரம் தேவைப்படும்.  முழுமையான சிங்கிள் சார்ஜில் 100 கிமீ வரை பயணிக்கலாம் என ஆட்டம்மொபைல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

48 வோல்ட் 250 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு அதிகபட்ச வேகம் 25 கிமீ என்பதனால் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை. 14 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி, முழுமையான எல்இடி விளக்குகள், முழுமையான டிஜிட்டல் டிஸ்பிளை, 6 கிலோ எடை கொண்ட பேட்டரியை நீக்கிக் கொள்ளும் வசதி, 20X4 ஃபேட் பைக் டயர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த மாடலின் பின்புறத்தில் சஸ்பென்ஷன் இல்லை.

முழுமையாக ஆட்டம் 1.0 பைக்கினை சார்ஜ் செய்ய ஒரு யூனிட் மின்சாரம் தேவைப்படும், எனவே இந்தியாவில் ஒரு யூனிட் மின்சார கட்டணம் ரூ.7-ரூ.10 வரை வசூலிக்கப்படுகின்றது. எனவே, ரூ.7க்கு 100 கிமீ பயணிக்கலாம் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்ற இந்த பைக்கிற்கு 2 வருட பேட்டரி வாரண்டி வழங்கப்படுகின்றது. ஆட்டமொபைல் ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்கின் விலை ரூ.50,000 மட்டுமே ஆகும்.

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ஆலையில் ஆண்டுக்கு 15,000 வாகனங்களை தயாரிக்கும் திறன் பெற்ற இந்நிறுவனம், கூடுதலாக 10,000 எண்ணிக்கை அதிகரிக்கும் திறனை பெற்றுள்ளது.

Exit mobile version