Site icon Automobile Tamil

புதிய பஜாஜ் பிளாட்டினா 110 பைக் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஆண்டி ஸ்கிட்டிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய பஜாஜ் பிளாட்டினா 110 பைக் மாடலை ரூ. 49,197 விலையில் வெளியிட்டுள்ளது.

தொடக்கநிலையில் சந்தையில் உள்ள 110சிசி என்ஜின் பைக்குகளுக்கு போட்டியாக வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பிளாட்டினா 110 பைக் மாடலில் பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.

புதிய பிளாட்டினா 110 பைக்கில் 8.4 bhp பவரை வெளிப்படுத்தும் 115 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.1 Nm டார்க் வெளிப்படத்தும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றள்ளது.  இந்த பைக்கில் முதன்முறையாக பாதுகாப்பு சார்ந்த அம்சமாக ஆன்ட்டி ஸ்கிட்டிங் பிரேக் சிஸ்டம் அமைப்பு இடம் பெற்றள்ளது.

ஆன்ட்டி ஸ்கிட்டிங் பிரேக் சிஸ்டம் ?

Anti-Skid Braking System என்பது பொதுவாக ஒர பிரேக் பிடிக்கம் சமயங்களில் இரண்டு பிரேக்குகள் அதாவது முன் மற்றும் பின் பிரேக்கினை இயக்கி சீரான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துவதானால் வாகனம் நிலை தடுமாறுவதனை பெரிதும் தடுக்க ஆன்ட்டி ஸ்கிட்டிங் பிரேக் சிஸ்டம் உதவுகின்றது.

பிளாட்டினா 100 ES வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள பிளாட்டினா 110 பைக்கில் முன்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் உடன் பின்புறத்தில் 110மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் 135மிமீ முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 110மிமீ ஸ்பீரிங் கொண்ட நைட்ரக்ஸ் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.

ட்யூப்லெஸ் டயர் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளுடன், நேர்த்தியான புதிய கிராபிக்ஸ் பெற்ற பிளாட்டினா 110 பைக்கில் கருப்பு நிறத்தில் கிரே ஸ்டிக்கர், கருப்பு நிறத்தில் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது. டிவிஎஸ் ரேடியான், ஹீரோ பேஸன் புரோ 110, ஹோண்டா ட்ரீம் 100 உள்ளிட்ட மாடல்களை எதிர்க்கொள்ள உள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 110 பைக் விலை ரூ. 49,197 (விற்பனையக விலை டெல்லி)

Exit mobile version