பஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் விற்பனைக்கு தொடங்கப்பட்டது

 

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் குறைந்த விலை க்ரூஸர் ரக மாடலாக விளங்கும் பஜாஜ் அவென்ஜர் வரிசையில் உள்ள பஜாஜ் அவென்ஜர் 220 ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் பெற்ற அவென்ஜர் விலை ரூ. 1.02 லட்சம் ஆகும்.

பஜாஜ் அவென்ஜர் 220

க்ரூஸர் ரக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அவென்ஜர் மாடலில் க்ரூஸ் 220 மற்றும் ஸ்டீரிட் 220 என இரு வேரியன்ட் மாறுபாடுகளில் கிடைக்கின்றது. இரு மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு வேறு எவ்விதமான மாற்றங்களையும் பெறவில்லை.

வருகின்ற ஏப்ரல் 1, 2019 முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து இரு சக்கர வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு வசதியை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 125சிசி அல்லது மேற்பட்ட சிசி மாடல்களில் மற்றும் 125சிசி திறனுக்கு கீழுள்ள மாடல்களில் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட உள்ளது.

220சிசி என்ஜினை பெற்றுள்ள அவென்ஜர் 19 bhp பவர் மற்றும் 17.5 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் இரண்டு கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது.

இரு வேரியன்ட்கள் விலையில் சாதாரன மாடலை விட ரூ. 6700 வரை உயர்த்தபட்டுள்ளது.

புதிதாக ஏபிஎஸ் பிரேக் உடன் வெளிவந்துள்ள பஜாஜ் அவென்ஜர் 220 பைக் விலை ரூ.1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பிரசத்தி பெற்ற பல்சர் வரிசையில் பஜாஜ் பல்சர் 220 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கை இணைத்திருந்தது.