அடுத்த சில மாதங்களுக்குள் பஜாஜ் சிஎன்ஜி பைக் அறிமுகம்

உலகின் முதல் சிஎன்ஜி பைக்

உலகின் அதிக மைலேஜ் தரும் முதல் சிஎன்ஜி பைக் மாடலை விற்பனைக்கு நடப்பு 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Bajaj CNG Bike

சமீபத்தில் CNBC TV18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜீவ் பஜாஜ் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சந்தையுடன் பிரீமியம் பைக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் வகையில் முதல் சிஎன்ஜி பைக் மாடல் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு வருவதனை அதிகார்ப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். முன்பாக இந்த மாடல் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக இந்த சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களை தொடர்ந்து பைக்குகளும் வெளியாக உள்ளதால் மிகப்பெரிய அளவில் இரு சக்கர வாகன சந்தை மாறுதலை சந்திக்க உள்ளது.

Bruzer E101 என்ற பெயரில் தயாரித்து வருகின்ற பஜாஜ் ஆட்டோவின் துவக்க நிலையில் உள்ள தயாரிப்பு பணிகள் நிறைவுற்று மிக சிறப்பான சோதனை முடிவுகளை பஜாஜ் பெற்றுள்ளது.

சிஎன்ஜி பைக் பெட்ரோல் மாடல்களை விட மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் என்பதனால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெறும் என பஜாஜ் ஆட்டோ நம்புகின்றது.

ஆரம்ப உற்பத்தித் திட்டமாக ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் முதல் 1.2 லட்சம் சிஎன்ஜி பைக்குகளை உற்பத்தி செய்வதாக இருந்த நிலையில், தற்பொழுது சுமார் 2 லட்சம் யூனிட்டுகளாக உற்பத்தி செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது. பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் விலை ரூ.1.50 லட்சத்திற்குள் துவங்க வாய்ப்புள்ளது.