குறைந்த விலை பைக் பஜாஜ் சிடி100 மற்றும் டிஸ்கவர் 125-ல் பாதுகாப்பு வசதி அறிமுகம்

Bajaj CT 100, Discover 125 CBS

பாதுகாப்பு சார்ந்த சிபிஎஸ் எனப்படும் கம்பைன்டு பிரேக்கிங் அம்சத்தை பெற்ற  குறைந்த விலை கொண்ட பஜாஜ் சிடி100 மற்றும் பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் முதல் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட மாடல்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பு சார்ந்த விதிகளுக்கு ஏற்ப புதிய மாடல்களை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது.

பஜாஜ் சிடி 100 மற்றும் டிஸ்கவர் 125

குறைந்த விலை பஜாஜின் சிடி 100 பைக்கில் ஸ்போக் வீல் , அலாய் வீல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் என மொத்தமாக மூன்று விதங்களில் கிடைக்கின்றது. இந்த பைக்கில் எலக்ட்ரிக் ஸ்டார்ட் பெற்ற மாடல் 102 சிசி என்ஜினை கொண்டுள்ளது.

மற்ற இரு வேரியன்டுகளும் 99.3cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்று அதிகபட்சமாக 8.08 BHP பவர் மற்றும் 8.05 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

சிடி100 சிபிஎஸ்

CT 100 CBS (spoke) – ரூ. 33,152/-
CT 100  CBS (alloy) – ரூ. 35,936/-
CT 100 CBS (alloy, electric start) – ரூ. 41,587/-

டிஸ்கவர் 125 சிபிஎஸ் பைக்கின் விலை

டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டிலும் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. 124.4cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்று அதிகபட்சமாக 11 BHP  பவர் மற்றும்11 Nm டார்க் வழங்குகின்றது.

Discover 125 (drum) – ரூ.. 58,003/-
Discover 125 (disc) – ரூ. 61,504/-

இரு மாடல்களிலும் சிபிஎஸ் பிரேக் தவிர வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.

Exit mobile version