பிஎஸ்6 பஜாஜ் சிடி, பிளாட்டினா விற்பனைக்கு வெளியானது

ct110

குறைந்த விலை பைக் மாடலான பஜாஜ் ஆட்டோவின் சிடி 100, சிடி 110, பிளாட்டினா 100 மற்றும் பிளாட்டினா 110 என நான்கு வேரியண்டுகளும் பிஎஸ்6 என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டுமே பஜாஜ் ஆட்டோவிif ஆர் & டி மையத்தால் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான எலக்ட்ரானிக் இன்ஜெக்‌ஷன் (EI) அமைப்பைக் கொண்டுள்ளன. என்ஜினை சீராக இயக்குவதுடன் மற்றும் மைலேஜ் அதிகரிக்க EI அமைப்பு உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முந்தைய பிஎஸ்4 மாடலை விட பராமரிப்பு இலகுவாக அமைகின்றது.

பஜாஜ் சிடி 100, பிளாட்டினா 100 மாடலில் 102 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டு 7500 ஆர்பிஎம்-மில் 7.5 பிஹெச்பி பவரும், 5500 ஆர்பிஎம்-மில் 8.24 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. மறுபுறம், பஜாஜ் சிடி 110, பிளாட்டினா 110 என இரு மாடல்களிலும்  115 சிசி எஞ்சினையும் பெறுகிறது. இது 7,000 ஆர்பிஎம்மில் 8.4 பிஹெச்பி ஆற்றலையும், 5,000 ஆர்பிஎம்மில் 9.81 என்எம் முறுக்கு விசையை வழங்குகின்றது. இரண்டு பைக்குகளும் இப்போது எலக்ட்ரானிக் இன்ஜெக்ஷன் (Ei) அமைப்பைக் கொண்டுள்ளன.

அடுத்தப்படியாக பிளாட்டினா 110 ஹெச்-கியர் மாடல் மட்டும் 5 வேக கியர்பாக்ஸை பெறுகின்றது. முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூபாய் 6 ஆயிரம் முதல் ரூபாய் 7 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பஜாஜ் CT100 ரூ. 40,794

பிளாட்டினா ரூ. 47,264 (kick-start)

பிளாட்டினா ரூ. 54,797 (electric-start)

(எக்ஸ்ஷோரூம்)

Exit mobile version