Automobile Tamilan

பிஎஸ்-6 பஜாஜ் பிளாட்டினா 110 H-கியர் பைக்கின் சிறப்புகள்

d164b bajaj platina 110 h gear

ஹைவே கியர் என 5 வேக கியர்பாக்ஸ் பெற்றதாக விற்பனைக்கு கிடைக்கின்ற பிளாட்டினா 110 H-கியர் பைக்கில் பிஎஸ் 6 இன்ஜினை பொருத்தி ரூ.60,816 விலையில் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

முந்தைய பிஎஸ்-4 மாடலின் அதே தோற்ற வடிவமைப்பில் பிஎஸ்-6 இன்ஜின் பெற்றதாக வந்துள்ள பிளாட்டினா 110 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 115.45 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் எலக்ட்ரானிக் கார்புரேட்டர் பெற்று அதிகபட்சமாக 8.6 ஹெச்பி பவரை 7000 RPM-லும், 9.81 Nm டார்க்கினை 5000 RPM-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

செமி டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரை பெறுகின்ற பிளாட்டினா 110 ஹெச் கியரில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், கடிகாரம், ஃப்யூவல் இன்டிகேட்டர், ஓடோமீட்டர் ட்ரீப் மீட்டர் போன்றவை உள்ளது.

சஸ்பென்ஷனை பொறுத்தவரை, பஜாஜின் கம்ஃபோர்ட் டெக் எனப்படுகின்ற பெயரில் வழங்கப்படுகின்ற பின்புறத்தில் 110 மிமீ பயணிக்கின்ற நைட்ரக்ஸ் ஸ்பீரிங் டூ ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மற்றும் 135 மிமீ பயணிக்கின்ற டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் இணைக்கப்பட்டு கூடுதலாக சிபிஎஸ் பெறுகின்றது. சிவப்பு மற்றும் கருப்பு என இரு விதமான நிறங்களை மட்டும் பெற்றுள்ளது.

Exit mobile version