Automobile Tamilan

ரூ.79,091 விலையில் பஜாஜ் பல்சர் 125 ஸ்பிளிட் சீட் விற்பனைக்கு அறிமுகம்

efb74 bajaj pulsar 125 split seat pricee0aeaf

இரட்டை பிரிவு இருக்கைப் பெற்ற பஜாஜ் பல்சர் 125 பைக்கின் விலை ரூ.79,091 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சாதாரன நியான் டிஸ்க் வேரியண்டை விட ரூ.3597 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.

பல்சர் 150 மாடலை போலவே அதே தோற்ற அமைப்பினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பல்சர் 125-ல் பாடி கிராபிக்ஸ் உட்பட அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின் எலெக்ட்ரானிக் கார்புரேட்டர் 8,500 ஆர்பிஎம்மில் 11.64 ஹெச்பி  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 என்எம் டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது. பிஎஸ்4 மாடலுடன் ஒப்பீடுகையில் 0.2 ஹெச்பி வரை பவர் சரிவடைந்துள்ள நிலையில் டார்க்கில் எந்த மாற்றங்களும் இல்லை.

பிரேக்கிங் சார்ந்த அம்சத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ பின்புற டிரம் வழங்கப்படலாம். மேலும் சிபிஎஸ் பிரேக் உடன் வந்துள்ளது.

125சிசி நியான் எடிஷன் மாடலை விட பீரிமியம் விலையில் அமைந்துள்ள இந்த பைக்கில் ஸ்பிளிட் சீட், பெல்லி பேன், ஸ்டைலிங் பாடி கிராபிக்ஸ், பெட்ரோல் டேங்கில் ஷோர்ட்ஸ் போன்றவை கூடுதலாக பெற்றுள்ளது.

பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 125சிசி பைக்கின் விலை ரூபாய் 73 939 (டிரம் பிரேக்) மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற பல்சர் 125 ரூபாய்  78,438 (டிஸ்க் பிரேக்). அனேகமாக ஸ்பிளிட் சீட் வேரியண்ட் ரூ.82,035 ஆக அமைந்திருக்கலாம்.

(எக்ஸ்ஷோரூம் சென்னை)

பல்சர் 125 மாடலின் விலை ரூபாய் 70 995 (டிரம் பிரேக்) மற்றும் டிஸ்க் பிரேக் பெற்ற பல்சர் 125 ரூபாய்  75,494 (டிஸ்க் பிரேக்). ஸ்பிளிட் சீட் வேரியண்ட் ரூ.79,091 ஆக அமைந்திருக்கின்றது.

மேலே கொடுக்கபட்டுள்ள ஸ்பிளிட் சீட் மாடல் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் ஆகும்

Exit mobile version