பஜாஜ் பல்சர் 220 ஏபிஎஸ் பிரேக் மாடல் வெளியானது

ஏபிஎஸ் பிரேக் கட்டாய நடைமுறையை முன்னிட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் பல்சர் 220 பைக் மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு ரூ.1.02 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

பஜாஜ் பல்சர் 220 பைக்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பைக் வரிசையாக விளங்கும் பஜாஜ் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் சேர்க்கப்பட உள்ளது. முதற்கட்டமாக பல்சர் 220F பைக்கில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு இணைக்கப்பட்ட மாடல் ரூ. 7,584 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 1, 2019 முதல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து இரு சக்கர வாகனங்களில் அடிப்படை பாதுகாப்பு வசதியை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 125சிசி அல்லது மேற்பட்ட சிசி மாடல்களில் மற்றும் 125சிசி திறனுக்கு கீழுள்ள மாடல்களில் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட உள்ளது.

220சிசி என்ஜினை பெற்றுள்ள 21bhp பவர் மற்றும் 19Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் இரண்டு கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது.

முன் மற்றும் பின் டயர்களில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருந்தாலும், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக பல்சர் 220F பைக் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பஜாஜ் பல்சர் 220 பைக் விலை ரூ. 1,05,254 (எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version