ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

2026 bajaj pulsar n160

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் N160 பைக்கில் கூடுதலாக கோல்டன் நிற அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ஒற்றை இருக்கை கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு ரூ.1.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல், என்ஜின் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ள நிலையில், போட்டியாளர்களான அப்பாச்சி RTR 160,  எக்ஸ்ட்ரீம் 160, எஸ்பி 160 உள்ளிட்ட மாடல்களுடன் சுசூகி ஜிக்ஸர் 155, யமஹா FZ வரிசை போன்றவை சவாலாக அமைந்துள்ளன.

New Bajaj Pulsar N160

பல்சர் என்160 பைக்கின் முன்பக்கத்தில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் 37 மிமீ அப்சைடு டவுன் (Upside Down) ஃபோர்க்ஸ் கொடுக்கப்பட்டு, பின்புறத்தில் வழக்கமான மோனோஷாக் அப்சார்பர் பெற்று ஸ்போர்ட்டியான மற்றும் பிரீமியம் தோற்றத்தைத் தருகின்ற நிலையில், பேர்ல் மெட்டாலிக் வைட், ரேசிங் ரெட், போலார் ஸ்கை புளூ மற்றும் பிளாக் போன்றவை உள்ளது.

N160 பைக்கில் 100/80 (முன்) மற்றும் 130/70 (பின்புற) டியூப்லெஸ் டயர்கள் கொண்ட 17-இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு, பஜாஜ் பல்சர் N160 மாடலில் முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் மூலம் பிரேக்கிங் உடன் டூயல் சேனல் ABS பெற்று மூன்று Road, Rain மற்றும் Off-Road ரைடிங் மோடுகளையும் பெற்றுள்ளது.

மேலும், மோசமான சாலைகளிலும் சிறந்த கையாளுமை உள்ள நிலையில் இதுவரை ஸ்பிளிட் சீட் மட்டுமே இருந்த நிலையில், குடும்பத்துடன் பயணிப்பவர்களின் வசதிக்காக இப்போது ஒற்றை இருக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட், 164.82cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜினில் 8,750rpm-ல் 15.68bhp மற்றும் 6,750rpm-ல் 14.65Nm டார்க் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Bajaj Pulsar N160 Price list

(EX-showroom)

Exit mobile version