Automobile Tamilan

மஞ்சள் நிறத்தில் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் அறிமுகமானது

0dd89 bajaj pulsar ns 200

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள பல்சர் 200 என்எஸ் மாடலில் புதிதாக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடலில் மட்டும் வந்துள்ளது. நிறத்தை தவிர வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.

விற்பனையில் உள்ள மாடலில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை. புதிதாக இணைக்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமானது ஏபிஎஸ் பிரேக் உடன் கூடிய வேரியன்டில் மட்டும் கிடைக்கின்றது. ஏபிஎஸ் பிரேக் அல்லாத மாடலில் இடம்பெறவில்லை. முன்பாக இந்த பைக்கில் வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

பல்சர் NS200 பைக்கில் 23.1 குதிரைசக்தி வெளிப்படுத்தும் 199.5 சிசி டிரிப்ள்-ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற சக்கரத்தில் 280மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு உள்ள இந்த பைக்கில் ஒற்றை சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் அல்லாத மாடல் மார்ச் 30 வரை மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகு ஏபிஎஸ் பிரேக் பெற்ற வேரியன்டுகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். எனவே பல்சர் என்எஸ் 200 பைக் விலை ரூ.1.12,435 (விற்பனையக விலை சென்னை) ஆகும். தற்சமயம் கிடைக்கின்ற ஏபிஎஸ் அல்லாத மாடல் விலை ரூ.1.00,435 (விற்பனையக விலை சென்னை).

Exit mobile version