ஸ்கிராம்பளர் பெனெல்லி லியோன்சினோ 800 வெளியானது – 2019 EICMA

Benelli Leoncino 800

பெனெல்லி நிறுவனத்தின் உயர் ரக ஸ்கிராம்பளர் லியோன்சினோ 800 பைக்கினை 2019 EICMA கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் இந்த மாடல் வெளிவரக்கூடும். முன்பாக இந்நிறுவனத்தின் 250 மற்றும் 500 லியோன்சினோ மாடல்கள் விற்பனையில் உள்ளது.

லியோன்சினோ 500 மாடலின் தோற்ற உந்துதலை பெற்றிருந்தாலும் சற்று மாறுபட்ட ஸ்டைலிங் அம்சங்கள் கூடுதலாக இணைக்கப்பட்டு லியோன்சினோ 800 பைக்கினை இயக்குவது 754 சிசி இரட்டை சிலிண்டர் திரவத்தினால் குளிரூட்டப்பட்ட என்ஜின் ஆகும். இது 9,000 ஆர்.பி.எம் சுழற்சியில் 81.6 ஹெச்பி மற்றும் 6,500 ஆர்.பி.எம் சுழற்சியில்  67 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. ஸ்லிப்பர் கிளட்சுடன் இணைந்து செயல்படும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 50 மிமீ மார்சோச்சி யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ பயணத்துடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் நான்கு பிஸ்டன் மோனோ ப்லாக் காலிப்பருடன்  320 மிமீ இரட்டை டிஸ்க்குகள் மற்றும் இரட்டை பிஸ்டன் காலிப்பருடன் 260 மிமீ பின்புற டிஸ்க் ஆனது அனைத்தும் ப்ரெம்போவிலிருந்து பெறப்படுகின்றன.  லியோன்சினோ 800 இரு முனைகளிலும் 17 அங்குல ஸ்போக்கடு சக்கரங்களைப் பயன்படுத்துகிறது, 120 / 70-17 மற்றும் 180 / 55-17 டயர்களில் ஆகும். பெட்ரோல் கலன் 15 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது.

Benelli Leoncino 800

Exit mobile version