Categories: Bike News

ரூ.1.10 லட்சம் விலையில் வந்த பிகாஸ் RUV350 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

Bgauss RUV350 Escooter

பிகாஸ் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய RUV350 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 120 கிமீ ஆக உள்ள நிலையில் விலையை ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.35 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Bgauss RUV350 Escooter

பிகாஸின் RUV350 (Rider Utility Vehicle) என்ற மாடலின் வடிவமைப்பு தென் கிழக்கு அசிய நாடுகளில் பிரபலமான ஒன்றாகும். இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ள 3kWh பேட்டரி பேக் ஆனது இருக்கையில் அடியில் பொருத்தப்பட்டு அலுமினிய கேஸ் உடன், பேட்டரி பேக் ஆனது IP67 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.  பின்புற சக்கரத்தில் பொருத்தப்பட்ட நிரந்தர காந்த ஒத்திசைவான மோட்டார் அதிகபட்சமாக 3.5 kW பவர், 165 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

ஈக்கோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்று மணிக்கு அதிகபட்சமாக 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் ஈக்கோ மோடில் பயணித்தால் ரேஞ்ச் 135 கிமீ வழங்கும் ARAI சான்றிதழ் பெற்றுள்ளதால் என 120 கிமீ வரை கிடைக்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

மூன்று விதமான வேரியண்டில் RUV 350i, RUV350 EX என இரண்டும் 90 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் RUV350 மேக்ஸ் டாப் மாடல் 120 கிமீ ரேஞ்ச் வழங்கலாம்.

0-80 % சார்ஜிங் பெற வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் மூன்று விதமான சார்ஜிங் ஆப்ஷனை வழங்குகின்றது.  500w மூலம் 5 மணி நேரம் 30 நிமிடங்களும், 840w மூலம் 2 மணி நேரம் 40 நிமிடங்களும் 1350w வரைவு சார்ஜரின் மூலம் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் ஆர்யூவி350 இ-ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 5 ஸ்டெப் ப்ரீலோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

இ-ஸ்கூட்டரில் டியூப்லெஸ் டயர்களுடன் 16-இன்ச் வீல் பெற்று காம்பி-பிரேக்கிங்  உடன் இரண்டு பக்கத்திலும் 130 மிமீ டிரம் பிரேக் உள்ளது. கூடுதல் அம்சங்களைப் பொறுத்தவரை, RUV350 மாடலில் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ஃபால்சென்ஸ், ரிவர்ஸ் மோட், சவாரி புள்ளிவிவரங்கள், டிஜிட்டல் ஆவண சேமிப்பு, அழைப்பு எச்சரிக்கைகளுக்கான புளூடூத் இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் ஆகியவற்றை பெற 5 அங்குல டிஎஃப்டி டிஸ்பிளே பெற்றுள்ளது.

RUV 350i – ₹ 1.10 லட்சம்

RUV 350 EX – ₹ 1.25 லட்சம்

RUV 350 Max – ₹ 1.35 லட்சம்

(எக்ஸ்ஷோரூம்)

Recent Posts

பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி…

23 hours ago

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V விற்பனைக்கு அறிமுகமானது

2024 ஆம் ஆண்டிற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய Xtreme 160R 4V மாடல் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன்…

1 day ago

டாடா கர்வ்.இவி ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்கள்

ஆகஸ்ட் 7ஆம் தேதி வரவுள்ள டாடா மோட்டார்சின் கர்வ்.இவி கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் காரில் 40.5Kwh மற்றும் 55Kwh இரண்டு…

1 day ago

வரவிருக்கும் மாருதி சுசூகியின் 2024 டிசையர் பற்றி சில முக்கிய விபரங்கள்

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற செடான் ரக 2024 டிசையர் மாடல் ஆகஸ்ட் மாதம் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற…

1 day ago

2024 மஹிந்திரா மராஸ்ஸோ விலை ரூ.20,000 உயர்ந்தது

சமீபத்தில் மராஸ்ஸோ எம்பிவி மாடலை தனது இணையதளத்தில் நீக்கியிருந்த மஹிந்திரா மீண்டும் தனது இணையதளத்தில் ரூ.20,000 வரை விலையை உயர்த்தி…

2 days ago

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கின் ஆன்ரோடு விலை பட்டியல்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி மோட்டார்சைக்கிளின் என்ஜின் விபரம் உண்மையான மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை…

2 days ago