Automobile Tamilan

முதன்முறையாக பிஐஎஸ் தரச் சான்று பெற்ற ஏதெர் எனர்ஜி சார்ஜிங் கனெக்டர்

ather charger connect bis

இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் முதன் முதலில் சார்ஜிங் கனெக்டருக்கு பிஐஎஸ் தரச் சான்று (Bureau of Indian Standards) பெற்ற நிறுவனம் என்ற பெருமையை ஏதெர் எனர்ஜி பெற்றுள்ளது.

நமது நாடில் விற்பனை செய்யப்படுகின்ற எந்தவொரு எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் கனெக்ட்ருக்கும் தற்பொழுது வரை முறையான வறுயறுக்கப்பட்ட எந்த அனுமதி பெறாத நிலையில், முதன்முறையாக இந்த குறையை ஏதெர் போக்கியுள்ளது.

BIS Approved Ather Charging Connecter

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி சுயமாக தயாரித்துள்ள AC மற்றும் DC ஒருங்கிணைந்த சார்ஜிங் கனெக்கடரை  Light Electric Combined Charging System (LECCS) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. LECCS ஆனது இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகளவில், உருவாக்கப்பட்ட முதல் ஏசி மற்றும் டிசி சார்ஜர் கனெக்டர் ஆனது IS17017 (Part 2 / Sec 7): 2023 தரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ARAI, EV தயாரிப்பாளர்கள் மற்றும் பிஐஎஸ் போன்ற பல்வேறு அமைப்புகள் புதிய பொதுவான சார்ஜர் இணைப்பியை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன.

வரும் காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது மிக தரமான ஏதெரின் தரமான சார்ஜிங் கனெக்டர் முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version