Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
பிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது | Automobile Tamilan

பிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

2c82c blacksmith b4 plus e scooter

சென்னையை தலைமையிடமாக கொண்ட பிளாக்ஸ்மித் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் B4 மற்றும் B4+ என இரு எலக்ட்ரிக் டூ வீலர்களை அறிமுகம் செய்துள்ளது. வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு ஏற்ற மின் ஸ்கூட்டராக B4+ வெளியிடப்பட்டுள்ளது.

முன்பாக இந்நிறுவனம், பி2 மற்றும் பி3 என இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது இந்நிறுவனத்திடம் உள்ள மின்சார ஸ்கூட்டர் வரம்பில் பி2, பி3, பி4 மற்றும் பி4+ ஆகியவை அடங்கும்.
முன்பதிவு செய்வதற்கான தொகை ரூ.1,000 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் முன்பதிவினை ரத்து செய்தால் திரும்பப்பெறக்கூடியதாகும்.

பிளாக்ஸ்மித் நிறுவனத்தின் டீலர்கள் நடப்பு ஆண்டின் மத்தியில் துவங்கப்பட்டு, விநியோகம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்படலாம்.

பிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ சிறப்புகள்

இரு மாடல்களுக்கும் முழுமையான சார்ஜிங் செய்ய 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதுடன் 5 கிலோவாட் ஹவர் மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 120 கிமீ பயணிக்கும் வரம்புடன் அதிக பவரை வழங்கும் அடர்த்தி கொண்ட NMC பேட்டரி பேக்  உடன் திறன்மிகுந்த ப்ளூடூத் பிஎம்எஸ் மற்றும் உயர் திறன் கொண்ட ஏசி கன்ட்ரோலருடன் வரவுள்ளது. பி4, பி4+ அதிகபட்சமாக 14.5 கிலோவாட் (19.44 பிஹெச்பி) சக்தி மற்றும் உச்ச முறுக்கு விசை 96 என்எம் ஆகும். இந்நிறுவன எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்புடன் இயங்கும் ஜி.பி.எஸ், அதே போல் திருட்டை தடுப்பதற்கான அலாரத்துடன் வரவுள்ளது.

இதுதவிர இந்த இரு ஸ்கூட்டர்களிலும் 60 / 80 / 100 கிமீ என மூன்று விதமான வேகத்தை தேர்ந்தெடுக்கலாம். இதில் பி4+ மின் ஸ்கூட்டர் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version