Automobile Tamilan

பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

bmw ce 04 scooter

இந்தியாவில் ரூ.14.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE04 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஸ்கூட்டர்களில் அதிக விலை கொண்ட மாடலாக விளங்குகின்றது.

BMW CE04

பிஎம்டபிள்யூ CE 04 மாடலில் 8.5kWh பேட்டரி கொண்டு இயக்கப்படுகிற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 130km தூரத்தை வழங்குகிறது. திரவ-குளிரூட்டப்பட்ட நிரந்தர காந்த மோட்டார், பொருத்தப்பட்டு 31kW (42hp) மற்றும் 62Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. Eco, Rain, Road என மூன்று விதமான ரைடிங் மோடுகளுடன் CE 04 மாடல் 2.6 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 50 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்றும், எலக்ட்ரானிக் முறையில் வரையறுக்கப்பட்ட 120 கிமீ வேகத்தை எட்டும் என குறிப்பிட்டுள்ளது.

டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஆஃப்செட் மோனோஷாக் பெற்று ஸ்டீல் இரட்டை லூப் சேஸ் உடன் பிரேக்கிங் அமைப்பில் J.Juan ரேடியல் பொருத்தப்பட்ட 4 பிஸ்டன் காலிப்பர்களுடன் இணைக்கப்பட்ட முன்பக்கத்தில் இரட்டை 265mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 265mm டிஸ்க் ஒற்றை பிஸ்டன் காலிபர் மூலம் கையாளப்படுகிறது.

CE 04  அனைத்து LED விளக்குகள், புளூடூத்-இணக்கமான 10.25-இன்ச் TFT டிஸ்ப்ளே, கீலெஸ் இக்னிஷன் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் ஏபிஎஸ் கொண்டிருப்பதுடன் முன்பக்கத்தில் 120/70-R15 மற்றும் பின்புறத்தில் 160/60-R15 பெற்று குறைந்த இருக்கை உயரம் 780mm இருந்தாலும், CE 04 ஆனது 231kg ​​எடையைக் கொண்டுள்ளது.

2.3kW மற்றும் வேகமான 6.9kW என இரண்டு சார்ஜிங் விருப்பங்களைக் கொண்டுள்ளது. 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜிங் நேரங்கள் 2.3kW சார்ஜருடன் 4 மணிநேரம் 20 நிமிடங்கள் மற்றும் 6.9kW சார்ஜரை பயன்படுத்தினால் 1 மணிநேரம் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

சாதாரணமாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு இணையான விலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளதால் எத்தனை நபர்கள் வாங்குவார்கள் என்பதெல்லாம் எதிர்காலத்தில் கேள்வி குறிதான் இருந்தாலும் இது ஒரு பிஎம்டபிள்யூ மோட்டார்டின் ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ள மாடலாகும்.

Exit mobile version