• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

by நிவின் கார்த்தி
11 November 2025, 11:27 am
in Bike News
0
ShareTweetSend

BMW F 450 GS bike

2025 EICMA அரங்கில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் குறைந்த விலை அட்வென்ச்சர் மாடலாக ட்வீன் சிலிண்டர் பெற்ற F 450 GS விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவிலும் வெளியிடப்பட வாயப்புள்ளது.

இந்த பிஎம்டபிள்யூ பைக்கினை டிவிஎஸ் மோட்டார் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

BMW F 450 GS

புதிதாக வடிவமைக்கப்பட்ட 420cc லிக்யூடு கூல்டு parallel-twin என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8,750 rpmல் பவர் 48 bhp மற்றும் 6,750 rpmல் 42 Nm டார்க் உற்பத்தி செய்யும் என BMW உறுதி செய்துள்ள நிலையில் புதிய 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச்  வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் அறிக்கையின் படி மைலேஜ் லிட்டருக்கு 26 கிமீ வரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு என இரு சாலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள 100/90-19 இன்ச் முன்சக்கரம் மற்றும் 130/80-17 இன்ச் பின்சக்கரம் கொண்டு USD ஃபோர்க் முன்புறத்தில், மற்றும் மோனோஷாக் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கடினமான சாலைகளிலும் பைக் மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும்.

310 மிமீ பிரேக் டிஸ்க் மற்றும் பின்புற சக்கரத்தில் 240 மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல்  பயன்படுத்தப்படுகிறது.

பாரம்பரிய GS வடிவமைப்பை பின்பற்றிய இந்த 450gs உண்மையான அட்வென்சர் பைக்காக உருவாக்கப்பட்டு மிக கூர்மையான ஹெட்லைட், உயரமான விண்ட்ஸ்க்ரீன், அகலமான ஹேண்டில் பார், மெட்டல் க்ராஷ் கார்டுகள் மற்றும் நீண்ட வில்ல்பேஸ் கொண்டிருப்பது முரட்டுத்தனமான தோற்றத்துடன் காட்சிக்கு வெளிப்படுத்துகின்றது.

மேலும், இது முழுமையான TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு, ரைடு-பை-வயர் த்ரோட்டில் (Eco, Rain, Road, Dynamic) ஆகியவற்றுடன் வருகிறது. இதன் எரிபொருள் டேங்க் சுமார் 14 லிட்டர் கொள்ளளவு கொண்டது,

மற்ற வசதிகளில் ABS Pro, டைனமிக் பிரேக் கண்ட்ரோல் (DBC), டைனமிக் டிராக்ஷ்ன் கண்ட்ரோல் (DTC) மற்றும் எஞ்சின் டிராக் டார்க் கண்ட்ரோல் (MSR) ஆகியவை அடங்கும்.

கூடுதல் “எண்டூரோ ப்ரோ” பயன்முறை, கரடுமுரடான ஆஃப்-ரோடு டயர்களுடன் ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டு மற்றும் பின்புற சக்கரத்தில் உள்ள ABS செயலிழக்க அனுமதிக்கிறது.

F 450 GS, இரண்டு பகுதி இருக்கையுடன் (845 மிமீ) தரநிலையாக வருகின்ற கருப்பு ரைடர் இருக்கை (830 மிமீ) மற்றும் கருப்பு/வெள்ளை/சிவப்பு நிறங்களில் (865 மிமீ) உயரமான Rallye இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

F 450 GS பைக்கில் Basic, Exclusive, Sport மற்றும் Trophy என நான்கு வேரியண்டுகளை பெற்றுள்ள நிலையில், டாப் டிராபி ஆஃப்-ரோடு ஃபுட் பெக்குகள், வெள்ளை ஹேண்ட் கார்டுகள்,
ரைடிங் மோட்ஸ் ப்ரோ, ஷிப்ட் அசிஸ்டென்ட் ப்ரோ, டின்டட் ரேலி விண்ட்ஷீல்ட், ஸ்போர்ட் சஸ்பென்ஷன், அலுமினியம் எஞ்சின் கார்டு மற்றும் ஈஸி ரைடு கிளட்ச் போன்ற வசதிகள் உள்ளது.

இந்திய சந்தையில் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபிள்யூ  F 450 GS விலை ரூ.4 முதல் ரூ.4.50 லட்சத்துக்குள் துவங்கலாம்.

Tags: BMW F 450 GS
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version