Automobile Tamilan

₹ 49 லட்சத்தில் பிஎம்டபிள்யூ M 1000 RR சூப்பர் பைக் விற்பனைக்கு வெளியானது

BMW M 1000 RR

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த சூப்பர் பைக் மாடலான M 1000 RR மற்றும் கூடுதல் வசதிகள் பெற்ற M Competition பேக்கேஜ் கொண்ட மாடல் ரூ.55 லட்சம் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சூப்பர்பைக் உலக சாம்பியன்ஷிப்பின் சாலைகளில் பயன்படுத்துவதற்குஏற்ற மாடலாகும். (WSBK என்றும் அழைக்கப்படுகிறது).

BMW M 1000 RR

பிஎம்டபிள்யூ M 1000 RR பைக்கில் 14,500rpm-ல் 212hp மற்றும் 11,000rpm-ல் 113Nm டார்க் வழங்கும்  லிக்யூடு கூல்டு, 999cc, இன்லைன் நான்கு இன்ஜின் ஆகும். டார்க் அப்படியே இருக்கும் போது, 2023 S1000 RR Pro M Sport பைக்குடன் ஒப்பிடும்போது, பவர் 2hp அதிகரித்துள்ளது. (மேலும் 750rpm அதிகமாக உள்ளது).

BMW M 1000 RR  பைக்கின் டாப் ஸ்பீடு 306 kmph வேகத்தில் செல்லும் மற்றும் 0-100 kmph இலிருந்து சுமார் 3.1 வினாடிகளில் தொடும். சஸ்பென்ஷனில் முன்பக்கத்தில் 45 மிமீ அப் சைடு ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில்  மோனோஷாக் பெற்றுள்ளது

இதில் 7 ரைடிங் மோடுகள் (அவற்றில் 3 முழுமையாக தனிப்பயனாக்கக்கூடியவை), மாறக்கூடிய ஏபிஎஸ் மற்றும் இழுவைக் கட்டுப்பாடு ஆகியவை அடங்கும், இவை அனைத்தும் 6.5-இன்ச் வண்ண TFT டேஷ் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர், மேலும் ஸ்போர்ட்டிவான அனுபவத்தை பெற விரும்பினால் எம் தொகுப்பிற்காக கூடுதலாக ரூ.6 லட்சம் செலவு செய்யலாம்.  ஜிபிஎஸ் டேட்டாலாக்கர், பில்லெட் மெஷினட் எம் பாகங்கள் , சக்கரங்களுக்கான கார்பன்-ஃபைபர் ஏரோ கவர்கள் மற்றும் இலகு எடை உலோக ஸ்விங்கார்ம் உள்ளது.

இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன மற்றும் டெலிவரி நவம்பர் 2023 இல் தொடங்கும்.

சமீபத்தில் விற்பனைக்கு ரூ.70 லட்சத்தில் வந்த டூகாட்டி பனிகேல் வி4 ஆர் மாடலை எதிர்கொள்ளுகின்றது.

Exit mobile version