Automobile Tamilan

பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

bounce infinity e1x

இந்தியாவில் விற்பனை செய்யபடுகின்ற மிகவும் குறைந்த விலையில் பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்துடன் கூடிய பவுன்ஸ் மொபைலிட்டியின் இன்ஃபினிட்டி E1X இ-ஸ்கூட்டரின் விலை ரூ.55,000 ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக மணிக்கு 65 கிமீ வேகத்தை பெற்றுள்ள டாப் இன்ஃபினிட்டி E1+X வேரியண்டின் விலை ரூ.65,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிமீ பயணிக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் விலை பேட்டரி பேக் இல்லாமல் மட்டும் வழங்கப்படுகின்றது.

பேட்டரி பேக்கினை ஸ்வாப்பிங் முறையில் இந்நிறுவனத்தின் ஸ்வாப் மையங்களில் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவதனால் பேட்டரி பேக்கிற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாமல் பேட்டரிக்கான சார்ஜிங் கட்டணத்தை மட்டும் சந்தா முறையில் செலுத்த வேண்டியிருக்கும்.

முதலில் இன்ஃபினிட்டி E1X மாடலின் நுட்பவிபரங்கள் பின் வருமாறு;-

இன்ஃபினிட்டி E1+X மாடலின் நுட்பவிபரங்கள் பின் வருமாறு;-

இரு ஸ்கூட்டர்களுக்கும் பொதுவான அம்சங்கள்

நாடு முழுவதும் 60க்கு மேற்பட்ட டீலர்களை பெற்றுள்ள பவுன்ஸ் நிறுவனம் மிக சிறப்பான ஸ்வாப்பிங் நுட்பத்தை வழங்கி வரும் நிலையில் இன்ஃபினிட்டி E1X,  E1+X என இரண்டின் டெலிவரியும் ஜூன் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.

Exit mobile version