Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
bs6 bajaj avenger: பிஎஸ்6 பஜாஜ் அவெஞ்சர் பைக் விற்பனைக்கு வெளியானது

பிஎஸ்6 பஜாஜ் அவெஞ்சர் பைக் விற்பனைக்கு வெளியானது

bajaj avenger

இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸர் ரக மாடலான பஜாஜ் அவெஞ்சர் வரிசை பைக்கின் பிஎஸ்6 விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவெஞ்சர் ஸ்டீரிட் 160, க்ரூஸ் 220, ஸ்டீரிட் 220 போன்றவற்றின் விலை ரூ.7,000 முதல் ரூ. 11,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

முந்தைய பிஎஸ்4 பைக்கின் தோற்ற வடிவமைப்பில் எந்த மாறுதல்களும் இல்லாமல், கூடுதலான எஃப்ஐ என்ஜின் மற்றும் எக்ஸ்ஹாஸ்டில் மட்டும் சிறிய அளவில் மாறுதல்கள் கொண்டிருக்கின்றது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை. குறிப்பாக முழுமையான என்ஜின் பவர் விபரங்கள் வெளியாகவில்லை.

அவெஞ்சர் 220 க்ரூஸ் மற்றும் ஸ்டீரிட் 220 பைக்குகளில் பொதுவாக இடம்பெற்றுள்ள 220 சிசி என்ஜின் அதிகபட்சமாக 19 ஹெச்பி பவர் மற்றும் 17.5 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.

அடுத்ததாக உள்ள குறைந்த விலை அவெஞ்சர் 160 மாடலில் உள்ள என்ஜின் அதிகபட்சமாக 14.8 ஹெச்பி பவர் மற்றும் 13.5 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.

பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220 – ரூ.1.15 லட்சம்

பஜாஜ் அவெஞ்சர் ஸ்டீரிட் 220 – ரூ.1.15 லட்சம்

பஜாஜ் அவெஞ்சர் ஸ்டீரிட் 160 – ரூ. 89,536

(எக்ஸ்ஷோரூம்)

மேலும் படிங்க – பஜாஜ் பல்சர் பைக்குகள் பிஎஸ்6 விலை பட்டியல்

Exit mobile version