பிஎஸ்-6 பஜாஜ் பிளாட்டினா 100 விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோவின் பட்ஜெட் விலை பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள பிளாட்டினா 100 இப்போது பிஎஸ் 6 இன்ஜின் பெற்றதாக ரூ.48,026 விலையில் துவங்குகின்றது. இந்த மாடலின் எலக்ட்ரிக் ஸ்டார்ட் விலை ரூ.56,365 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விலை குறைந்த பைக் வரிசையில் உள்ள சிடி 100 மாடலை தொடர்ந்து 100சிசி என்ஜின் பெற்ற பிளாட்டினா மாடலும் உள்ளது. இந்த மாடலில் 110 ஹெச் கியர் மற்றும் 100 என இரண்டு விதமாக கிடைக்கின்றது.

புதிய பிளாட்டினா 100 பைக்கின் தோற்ற அமைப்பில் முகப்பு எல்இடி டி.ஆர்.எல் மற்றும் விண்ட்ஸ்கீரின் சிறிய அளவில் மாற்றங்களை பெற்று புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் இருக்கை பிளாட்டினா 110 ஹெச் கியர் பைக்கிலிருந்து பெற்றுள்ளது.

102 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டு 7500 ஆர்பிஎம்-மில் 7.5 பிஹெச்பி பவரும், 5500 ஆர்பிஎம்-மில் 8.24 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

பிளாட்டினா 100 ரூ. 48,026 (kick-start)

பிளாட்டினா ரூ. 56,365 (electric-start)

Exit mobile version