பிஎஸ் 6 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அறிமுகம்

ஹீரோ நிறுவனத்தின் குறைந்த விலை அட்வென்ச்சர் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் பிஎஸ் 6 என்ஜின் பவர் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில வாரங்களில் விலை அறிவிக்கப்பட உள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட பவர் குறைந்துள்ளது.

விற்பனையில் கிடைத்து வந்த பிஎஸ் 4 மாடலை விட 0.6 ஹெச்பி வரை பவரும், 0.7 என்எம் டார்க்கும் சரிவடைந்துள்ளது. எனவே பிஎஸ் 6 என்ஜின் பெற்ற எக்ஸ்பல்ஸ் 200 இப்போது அதிகபட்சமாக  8,500rpm-ல் 17.8 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 16.45 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்பாக கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டிலும் கிடைத்து வந்த நிலையில் இப்போது Fi மட்டும் பெற்றதாக வந்துள்ளது.

மற்றபடி தோற்ற அமைப்பு வசதிகளில் எந்த மாற்றமும் வழங்கப்படவில்லை. விற்பனையில் உள்ள மாடலின் அதே தோற்ற அமைப்பினை கொண்டிருக்கின்றது. மற்றபடி பைக்கின் எடை 3 கிலோ வரை அதிகரித்துள்ளதால் இப்போது 157 கிலோ எடையைக் கொண்டுள்ளது.

190 மிமீ பயணிக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மோனோஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ வரை பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட், ப்ளூடூத் ஆதரவை பெற்ற எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டதாகவும், நேவிகேஷன் ஆதரவுடன் வந்துள்ளது.

டூரிங் ரக எக்ஸ்பல்ஸ் 200 டி மாடலின் நுட்ப விபரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை. இருந்தாலும் இரண்டு மாடலும் ஒரே மாதிரியான என்ஜினை பெற்றிருக்கும்.

கோவிட்-19 பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் விலை தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை.

Exit mobile version