Automobile Tamil

ரூ.75,672க்கு விற்பனைக்கு புதிய பிஎஸ்6 ஹோண்டா SP125 வெளியானது

honda shine sp 125

ஹோண்டா ஷைன் பைக்கின் அடிப்படையில் புதிய SP125 மாடலில் பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக வெளிவந்துள்ள நிலையில் இந்த பைக்கில் ஷைன் பேட்ஜ் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ் மற்றும் வடிவமைப்பினைப் பெற்றுள்ள எஸ்பி125 நான்கு விதமான நிறங்களில் கிடைக்க உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது முதல் பிஎஸ்6 ஸ்கூட்டராக வெளியிடப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 மாடலை தொடர்ந்து அடுத்த பிஎஸ்6 பைக் மாடலாக ஷைன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டரில் இடம்பெற்றிருந்ததைப் போன்றே ஹோணாவின் புதிய eSP நுட்பம் இடம்பெற்றுள்ளது.

ஹோண்டாவின் eSP (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா SP125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ் 4 மாசு உமிழ்வு என்ஜின் அதிகபட்சமாக 10.57 ஹெச்பி வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கதாகும்.

பல்வேறு நவீன வசதிகளை ஆக்டிவா 125 மாடலில் இருந்து பெற்றுள்ள எஸ்பி 125 பைக்கில்  ஹோண்டாவின் புதிய அமைதியான ஸ்டார்டிங் அம்சத்தையும் பெறுகிறது. இது வழக்கமான ஸ்டேட்டருக்கு மாறாக, பைக்கைத் தொடங்க ஏசி ஜெனரேட்டரை (அல்லது ஆல்டர்னேட்டர்) பயன்படுத்துவதன் மூலம் இதைச் செய்கிறது. எஸ்பி 125 புதிய முழு டிஜிட்டல் கருவி கிளஸ்டரையும் கொண்டுள்ளது, இது பைக்கின் நிகழ்நேர எரிபொருள் செயல்திறன், பெட்ரோல் இருப்பிற்கான தூரம், கியர் நிலை காட்டி மற்றும் பலவற்றைக் காட்டுகிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், டெயில்லைட், 5 ஸ்போக்குடு அலாய் வீல், என்ஜின் கில் சுவிட்சு மற்றும் பல மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டைலிங் கூறுகளை கொண்டதாக கிடைக்கின்றது.

சிபி ஷைன் எஸ்பி 125 பைக்கின் வீல்பேஸ் 19 மிமீ அதிகரிக்கப்பட்டு, 1,285மிமீ ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பைக்கின் நீளம் 13 மிமீ அதிகரிக்கப்பட்டு, 2020 மிமீ ஆக உயர்ந்துள்ளது. அடுது பைக்கின் அகலம் 23 மிமீ உயர்த்தப்பட்டு, 785 மிமீ ஆகவும், அதேவேளை, பைக்கின் உயரம் 82 மிமீ உயர்த்தப்பட்டுள்ளது.

6 வருட வாரண்டி வழங்கப்பட்டுகின்ற ஹோண்டா எஸ்பி 125 பைக்கில் இரு டயரிலும் டிரம் பிரேக் , மற்றும் முன்புற டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது.

2020 பிஎஸ்6 ஹோண்டா ஷைன் எஸ்பி 125 விலை பட்டியல் 

BS6 Honda SP125 – ரூ.75,672 (டிரம்)

BS6 Honda SP125 – ரூ.79,872 (டிஸ்க்)

(சென்னை எக்ஸ்ஷோரூம்)

முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ.9,000 வரை புதிய பிஎஸ்6 ஹோண்டா எஸ்.பி. 125 பைக் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Exit mobile version