Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ஜாவா, ஜாவா 42 பைக்கின் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது , ரூ.1.60 லட்சம்

ஜாவா, ஜாவா 42 பைக்கின் பிஎஸ்6 விற்பனைக்கு வெளியானது , ரூ.1.60 லட்சம்

jawa 42

ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தற்போது பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணயான ஜாவா, ஜாவா 42 பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புதிய மாடல் ரூ.9,928 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனை செய்யப்பட்டு வந்த பிஎஸ் 4 மாலை விட ஜாவா 42 மாடல் அதிகபட்சமாக ரூபாய் 5 ஆயிரம் முதல் 9 ஆயிரத்து 928 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள் ஆனது ரூபாய் 9 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Bs6 முறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பவரில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து முன்பு வெளியிட்ட அதே பவர் மற்றும் டார்க்கினை வழங்குகின்றது. இரண்டு குழல் பெற்ற புகைப்போக்கி கொண்ட 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த மாடலில் சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.

பிஎஸ்6 ஜாவா பைக் விலை பட்டியல்

பிஎஸ்6 ஜாவா சிங்கிள் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.73 லட்சம் (முன்பு ரூ.1.64 லட்சம்)

பிஎஸ்6 ஜாவா டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.82 லட்சம் (முன்பு ரூ.1.64 லட்சம்)

இந்த மாடலில் உள்ள மரூன் நிறம் மட்டும் ரூ.1,000 கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளது.

பிஎஸ்6 ஜாவா 42 பைக் விலை பட்டியல்

பிஎஸ்6 ஜாவா 42 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.60 லட்சம் முதல் ரூ.1.65 லட்சம் வரை (முன்பு ரூ.1.55 லட்சம்)

பிஎஸ்6 ஜாவா 42 டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 1.69 லட்சம் முதல் ரூ.1.74 லட்சம் வரை (முன்பு ரூ.1.64 லட்சம்)

Exit mobile version