Automobile Tamilan

பிஎஸ்6 சுசூகி இன்ட்ரூடர் பைக் விற்பனைக்கு வெளியானது

b54b4 suzuki intruder bs6

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை க்ரூஸர் ரக மாடல்களில் ஒன்றான சுசூகி இன்ட்ரூடர் பைக்கின் பிஎஸ்6 மாடல் ரூ.1.20 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முன்பாக விற்பனைக்கு கிடைத்து வந்த பிஎஸ்4 கார்புரேட்டரை விட 20 ஆயிரம் ரூபாய் கூடுதலாகவும், எஃப்ஐ மாடலை விட 13 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை.

பிஎஸ்4 மாடலை விட பவர் கணிசமாகக் குறைந்துள்ளது. 13.6 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் SF வரிசை பைக் என்ஜினில்  ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 13.8 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. முன்பாக பிஎஸ்4 பதிப்பில் 14.1hp பவர் மற்றும் 14Nm வெளிப்படுத்தியது.

இன்ட்ரூடர் மாடல் மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்கின்றது. சுசுகி ஜிக்ஸர் பிஎஸ்6 மாடலும் 13,000 வரை விலை உயர்த்தப்பட்டிருந்தது.

Exit mobile version