பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 விற்பனைக்கு வெளியானது

110சிசி ஸ்கூட்டர் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு மாடலான ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 பிஎஸ்6 இன்ஜின் பெற்றதாக ரூ.58,460 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட சிறப்பான எரிபொருள் சிக்கனம் கொண்டதாக வந்துள்ள பிஎஸ்6 மாடலில் இன்ஜின் மேம்பாட்டை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மாடலில்  ET-Fi ஆதரவுடன் கூடிய 7.7 HP பவர் மற்றும் 8.8 Nm டார்க் வெளிப்படுத்துக்கூடிய 110சிசி இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இதே என்ஜின் இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற டிவிஎஸ் ஜூபிடர் மாடலில் அமைந்துள்ளது.

மற்றபடி தொடர்ந்து எல்இடி, டிஆர்எல், எல்இடி டெயில் லைட், 19 லிட்டர் கொள்ளளவு பெற்ற ஸ்டோரேஜ் உடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்றவற்றை பெற்றுள்ளது. ஹிமாலயன் ஹை சீரிஸ் மற்றும் மேட் சீரிஸ் என இரு விதமாக கிடைக்கின்றது.

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆரம்ப விலை ரூ.58,460 (எக்ஸ்ஷோரூம் சென்னை)

 

Exit mobile version