Automobile Tamilan

இந்தியா வரவிருக்கும் ஹோண்டா NX500 பைக் EICMA 2023ல் அறிமுகம்

honda nx500

EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வந்துள்ள ஹோண்டா அட்வென்ச்சர் டூரிங் ரக NX500 மாடல் இந்திய சந்தையில் நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முன்பாக இந்த மாடல் CB500X என அழைக்கப்பட்ட நிலையில் NX என குறிப்பிட்டு ‘New x-over’ அதாவது NX500 என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

2024 ஹோண்டா என்எக்ஸ் 500 பைக்கில் தொடர்ந்து 471cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் 47.5 hp பவரை வழங்கி வருகின்றது.

Honda NX500

சிறப்பான ஆன்-ரோடு மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 471cc பேரலல்-ட்வின் என்ஜினில் கிராங்க் கவுண்டர்வெயிட் மற்றும் பேலன்ஸ் ஷாஃப்ட்டை மேம்படுத்தியுள்ளது. தொடர்ந்து 47.5 hp பவர் மற்றும் 43.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

என்எக்ஸ் 500 அட்வென்ச்சர் பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் மோனோஷாக் பெற்று புதிய வடிவமைப்பினை பெற்று அகலமான பெரிய விண்ட்ஷீல்டு மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட் கொடுக்கப்பட்டு முந்தையதை விட ஃபேரிங் பேனல்கள் மேம்படுத்தப்படதாக டெயில்லைட் புதிய ஸ்டைலிங் பெறுகிறது.

ஐந்து அங்குல TFT டிஸ்பிளே உடன் ப்ளூடூத் உடன் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி கொண்டதாக அமைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஹோண்டா பிங்விங் டீலர் மூலம் புதிய NX500 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் ஏற்கனவே CB500X விற்பனையில் உள்ளது.

இதுதவிர, ஃபேரிங் ஸ்டைலை பெற்ற ஹோண்டா CB500R மற்றும் நேக்டூ ஸ்டைலை பெற்ற CB500 ஹார்னெட்  என இரண்டும் ஒரே 471சிசி என்ஜினை கொண்டதாக அமைந்துள்ளது.

 

Exit mobile version