Automobile Tamil

விரைவில்., சிஎஃப் மோட்டோ பைக்குகள் விற்பனைக்கு வெளியாகிறது

சிஎஃப் மோட்டோ

சீனாவை தலைமையிடமாக கொண்ட சிஎஃப் மோட்டோ (CF Moto) பைக் தயாரிப்பாளர் முதற்கட்டமாக நான்கு மோட்டார்சைக்கிள்களை ஜூலை 4 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

முதற்கட்டமாக இந்தியாவில் CFMoto 300NK, 650NK, 650MT மற்றும் 650GT என நான்கு மாடல்களை வெளியிட உள்ளது. இதில் 300NK, 650NK மாடல்கள் தேக்டு வெர்ஷன் ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலாகவும், 650MT மற்றும் 650GT என இரு மாடல்களும் ஸ்போர்ட்டிவ் டூரிங் பைக்காகும்.

சிஎஃப் மோட்டோ பைக் அறிமுக விவரம்

இந்தியாவில் ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் என்ற பெங்களூரு நிறுவனத்துடன் இணைந்து விற்பனையை துவங்க உள்ள இந்த சீன நிறுவனம், பைக்குகளின் உதிரிபாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து சிகேடி (CKD completely Knocked Down) முறையில் பாகங்களை பெங்களூருவில் உள்ள ஏஎம்டபிள்யூ தொழிற்சாலையில் ஒருங்கிணைத்து விற்பனை செய்ய உள்ளது.

தொடக்க நிலை மாடலாக வரவுள்ள சிஎஃப் மோட்டோ 300 NK பைக்கில் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமபாக 34 ஹெச்பி பவர், மற்றும் 20.5 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் TFT டிஸ்பிளே அம்சம் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

650NK, 650MT மற்றும் 650GT என மூன்று பைக்குகளிலும் 649சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த 650NK என்ஜின் அதிகபட்சமபாக 61 ஹெச்பி பவர், மற்றும் 56 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த பைக்கில் TFT டிஸ்பிளே அம்சம் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

650MT பைக் மாடல் அதிகபட்சமபாக 71 ஹெச்பி பவர், மற்றும் 56 என்எம் டார்க் வெளிப்படுத்தும்.

இந்தியாவில் சிஎஃப் மோட்டோ 300NK பைக் விலை ரூபாய் 2 லட்சத்திற்குள் வெளியாகும். அடுத்தப்படியாக மற்ற மூன்று மாடல்களும் ரூபாய் 3.50 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version