Automobile Tamilan

இந்தியா வரவுள்ள டாவோ EV மின் ஸ்கூட்டர் விபரம் வெளியானது

dao electric scooter

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற டாவோ எலெக்ட்ரிக் வாகன (Dao EV) தயாரிப்பாளரின் முதல் மின் டாவோ ஜிடி ஸ்கூட்டர் பிப்ரவரி மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலத்தில் 20க்கு மேற்பட்ட நகரங்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாக உள்ள டாவோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிக சிறப்பான உயர் தர லித்தியம் ஃபெரா பாஸ்பேட் ( LFP battery) கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுவதுடன், அதி வேகமாகவும் அதே நேரத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்ற மாடலாக விளங்க உள்ளது. இந்நிறுவனம் வெளியிட உள்ள முதல் மாடல் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு வழங்கவல்லதாக இருக்கும்.

மேலும் இந்நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை CARES (Collision Protection System, Auto Control System, Reverse Mode, Emergency Rescue System, Smart Lighting System) எனப்படுகின்ற நுட்பத்தின் கீழ் செயற்படுத்துகின்றது. மோதலை தடுக்கும் வசதி, தானியங்கி கட்டுப்பாடு அமைப்பு, ரிவர்ஸ் மோடு, அவசரகால உதவி மற்றும் ஸ்மார்ட் லைட்டிங் போன்றவற்றுடன் இந்த மாடல் எக்கானமி மோடில் மணிக்கு 38 கிமீ வேகமும், ஸ்போர்ட்ஸ் மோடில் 45 கிமீ வேகத்தில் மணிக்கு பயணிக்கும் திறனுடன் இறுதியாக டர்போ மோடில் மணிக்கு 49 கிமீ வேகத்தை அதிகபட்சமாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1500 வாட்ஸ் மோட்டார் கொண்டு இயக்கப்பட்டு இதன் பேட்டரி 3-4 மணி நேரத்தில் முழுமையான சார்ஜிங் செய்வதுடன், பேட்டரி வாரண்டி மூன்று வருடம் அல்லது 30,000 கிமீ வாரண்டி வழங்குகின்றது.

நிகழ் நேரத்தில் வாகனத்தினை அனைத்து செயல்பாடுகளையும் ஸ்மார்ட்போன் ஆப் வாயிலாக கண்கானிக்க இயலும். முதற்கட்டமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாக உள்ள டாவோ மின் ஸ்கூட்டர்கள் 2020 இறுதிக்குள் பெரும்பாலான இந்திய நகரங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம் டீலர்களை தேர்வு செய்ய துவங்கியுள்ளது.

சீனா, அமெரிக்காவில் செயல்படுகின்ற டாவோ இ.வி நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் சீன சந்தையில் ஆண்டுக்கு 15 மில்லியன் இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.

Exit mobile version